Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரஷியாவின் கொரோனா தடுப்பு ஊசி ஸ்புட்னிக் – வி இந்தியாவில் ரூ.995.

0

ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டு செயல்படுகிறது

மத்திய அரசு அனுமதியைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி முதல்கட்டமாக 15 லட்சம் டோஸ் தடுப்பூசி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. 2-ம் கட்டமாக அதே எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இம்மாத இறுதியில் வர உள்ளன.

இந்தியாவில் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நாட்டிலேயே முதன் முறையாக ஐதராபாத்தில் முதல் கட்டமாக இன்று போடப்பட்டது.

ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை ரூ. 995.40 (5% ஜிஎஸ்டி உள்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும்போது விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் என இரண்டு இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.