இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திருச்சியை சேர்ந்து அ.முஹமது ஹக்கீம், அவசர சிகிச்சை நிபுணர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் ரூ.1 லட்சம் நிதியை வழங்கினார்.
திருச்சி மாவட்டத்திலேயே முதல் நபராக முதல்வரின் பொது நிவாரண நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இவர் திருச்சி பிரபல மூளை நரம்பியல் நிபுணர் மருத்துவர் அலீம் அவர்களின் மகன் ஆவார் .