இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. சாமானியன் முதல் சாதனையாளர் வரை எந்தவித பாகுபாடுமின்றி கொரோனா தாக்கி வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி. இவர் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார்.மேலும், நடிகர் பாலாஜி அவர்கள் விஜய்யின் பிகில் படத்திலும் , தனுசின் அசுரன் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
தற்போது இவர் வெப்ஸ் சீரியசிலும் நடித்து வருகிறார். தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக நடிகர் டேனியல் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர் மறைந்த திரைப்பட நடிகர் முரளியின் தம்பி ஆவார்(சித்தி மகன்)
தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத்குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.