Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வழக்கறிஞர் மகளின் கண் முன்னே வெட்டிக்கொலை.

0

திருச்சி பாலக்கரை கீழக்கொல்லைபகுதியை சேர்ந்தவர் கோபி கண்ணன் திருச்சியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது திருமணமாகி திருச்சி பீமநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கோதேஸ்வரி இவர்களுக்கு ஓர்ஆண் ஒர் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை தனது வீட்டின் அருகே தனது மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்து கொண்டிருந்தபோது திடீரென 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து வக்கில் கோபிகண்ணனை அவரது மகள் கண் முன்னே சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த படுகொலை குறித்து செசன்சு கோர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மென்ட் உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த படுகொலை குறித்து உறவினர்கள் கூறுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரியமங்கலம் பகுதியில் நடந்த கொலை வழக்கு சம்பந்தமாக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் அந்தக் கொலைக்கு பழிக்குப்பழியாக சம்பந்தப்பட்டவர்கள் கூலிப்படையை ஏவி வக்கீல் கோபி கண்ணன் கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.