காந்தி மார்க்கெட் தரைக்கடை வியாபாரிகள் கலெக்டரிடம் மனு :
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து தரைக்கடை சில்லறை காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஜெய்சங்கர், செயலாளர் டேவிட் அமிர்தராஜ், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் கலெக்டர் திவ்யதர்ஷினி யை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்
அதில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் 1500க்கும் மேற்பட்ட தரைக்கடை சில்லறை காய்கறி வியாபாரிகள் உள்ளனர் மாற்று இடங்களில் தற்காலிக கடை அமைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை வியாபாரம் துளியும் இருக்காது.
ரெகுலர் கஸ்டமர்கள் யாரும் வர மாட்டார்கள் ஆகவே காந்தி மார்க்கெட்டுக்குள் சமூக இடை வழியை பின்பற்றி முக கவசம் அணிந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் தரை கடையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது