திருச்சி காஜாமலை ரிச்சர்டு வளாகத்தில் அகில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் நலவாழ்வு இயக்க அலுவலகம் திறப்பு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.
அலுவலகத்தை இயக்க கௌரவ தலைவர் மற்றும் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் (பெ)எமிலி ரிச்சர்ட் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இயக்க நிறுவனத் தலைவர் துரை, பொது செயலாளர் சூரியகுமார், மாநில செயல் தலைவர் சோமநாதன், மாநில அமைப்பு செயலாளர் சதீஷ், திருச்சி மாவட்ட தலைவர் கந்தவேல், சட்ட ஆலோசகர்கள் முருகப்பன், வெங்கடேஷ், ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்