திருச்சி புதுக்கோட்டை சாலையில் நேற்று முன்தினம் இரவு ஏர்போர்ட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியய்யா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த மினிடோர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 50 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.
அரிசியை ஏற்றி வந்த டிரைவர் தேவதானத்தை சேர்ந்த வீராசாமி மகன் சுரேஷ் என்பவரை கைது செய்தனர். பின்னர் கடத்தல் அரிசியை உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.