இன்று திருச்சி ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில்
“மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்” அனுசரிக்கப்பட்டது.
அதுசமயம், உதவித் தலைமையாசிரியர்.
தர்மலிங்கம் அவர்களுடைய தலைமையில் சமூக இடைவெளியோடு கூடிய மாணவ மாணவிகள் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி” எடுத்துக் கொண்டார்கள்.
பின்னர் சமூக விரோதிகளிடமிருந்து பெண் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்
சிறப்பு தற்காப்புக்
கலைகளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அனைத்து மாணவிகள் மத்தியில் செய்து காட்டி
அசத்தினார்கள்.
உடற்கல்வி ஆசிரியர் கா. சுப்பிரமணியன் வழிகாட்ட மாணவ-மாணவிகள் தற்காப்பு கலைகளைச் செய்து காட்டினார்கள் .
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் இத்தகைய அரசு பள்ளியின் முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது என பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணன் தெரிவித்துள்ளர்