திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஸ்ரீரங்கம் மண்ணச்சநல்லூர், முசிறி . துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 18 இடங்களில் அதிமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடினர் .
இதில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி கலந்துகொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு வேட்டி, சேலை. இனிப்பு வழங்கினார்.
ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது .
மேலும் நோயாளிகளுக்கு ஹார்லிக்ஸ், குளுக்கோஸ் ஆகியவற்றை வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஆதாளி, அழகேசன், முத்துக்கருப்பன், ஜெயக்குமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,மாவட்ட பொருளாளர் சேவியர், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்