பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
திருச்சி மாநகரில் 50 இடங்களில் பெட்ரோல் பங்குகள், கேஸ் கம்பெனிகள் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் முன் இருசக்கர வாகனத்திற்கு வெள்ளைத்துணி போர்த்தி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி நூதன முறையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் வீரமுத்து தலைமை வகித்தார்.
மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார். மாம்பழச்சாலையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமை வகித்தார்.
மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா கண்டன உரையாற்றினார். திருவானைக்கோவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிகுழு உறுப்பினர் ரகுபதி தலைமை வகித்தார். அயன் ராஜ் கண்டன உரையாற்றினார்.
இதேபோன்று மாநகரப் பகுதியில் 50 இடங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.