மாசி வெள்ளிக்கிழமையில், ஆறு குளங்களிலும் கடலிலும் புனித நீராடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மாசி வெள்ளிக்கிழமையில், நதி முதலான நீர்நிலைகளில் நீராடிவிட்டு, வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தையும் முன்னோரையும் வணங்குவது இன்னும் இன்னுமான மகத்தான பலன்களைத் தந்தருளும். இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்து அருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாசி மாதம் என்பது அற்புதமான மாதம். மாசி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மிக மிக முக்கியத்துவம் கொண்ட வழிபாடுகள் செய்வதற்கான நாளாக, போற்றப்படுகின்றன.
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் விசேஷம்.
இந்த நாளில் நாம் செய்கிற எந்த வழிபாடுகளாக இருந்தாலும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள், மக நட்சத்திர நாளில் எவர் வேண்டுமானாலும் விரதம் மேற்கொள்ளலாம். சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம். என்றாலும் மகம் நட்சத்திரக்காரர்கள், அவசியம் மாசி மக நன்னாளில், வீட்டிலும் ஆலயத்திலுமாக வழிபாடுகள் செய்யவேண்டும். அப்படிச் செய்யும் வழிபாடுகள், உன்னதமான பலன்களைத் தந்தருளும் என்பது உறுதி என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அதேபோல், மாசிச் செவ்வாயும் மாசி வெள்ளிக்கிழமையும் பூஜை செய்வதற்கும் வழிபாடுகள் மேற்கொள்வதற்குமான தருணங்கள். இந்த நாட்களில், நதிகளில், ஆறுகளில், கடலில் நீராடுவது நம் பாவங்களையெல்லாம் போக்கவல்லது என்பது ஐதீகம்.
கங்கை, காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி முதலான நீர்நிலைகளில் நீராடுவோம். இவை மட்டுமின்றி, கோயில்களின் தீர்த்தக் குளங்களிலும் நீராடலாம். மாசி நீராடல் மகா புண்ணியம் என்றே சொல்லுவார்கள்.
மாசி மாதத்தில், மாசி வெள்ளிக்கிழமையில் புனித நீராடுங்கள். நதி நீராடுங்கள். புண்ணிய நதிகளில் நீராடி சூரியக் கடவுளையும் சிவனாரையும் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மங்காத செல்வம் கிடைத்திடும். நம் பாவங்கள் அனைத்தும் பறந்தோடும்.
மாசி வெள்ளியில், மாவிளக்கேற்றி வழிபடுவதும் உன்னத பலன்களைக் கொடுக்கும். மாங்கல்ய பலத்தைத் தந்தருளும்.
மாசி வெள்ளிக்கிழமையில், நதி முதலான நீர்நிலைகளில் நீராடிவிட்டு, வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தையும் முன்னோரையும் வணங்குவது இன்னும் இன்னுமான மகத்தான பலன்களைத் தந்தருளும். இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்து அருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.