234 தொகுதியிலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும். திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி.
*திருச்சி புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் புதிய அலுவலகத்திற்கான பூமி பூஜையை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு இன்று காலை அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்*.
பின்னர் *அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்*
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: *வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருச்சியில் மீண்டும் போட்டியிட நல்ல நாள் நேரம் பார்த்து இரண்டு தொகுதிகளில் விருப்ப மனு அளிப்பேன். எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என தலைமை கூறுகிறதோ,
அங்கு போட்டியிடுவேன். அ.தி.மு.க வில் எந்த வித கருத்து வேறுபாடும் கிடையாது. அரசு விளம்பரங்களையே முதலமைச்சர் வழங்குகிறார். வேண்டுமென்றே சிலர் ஆதாயம் தேட அ.தி.மு.க வில் கருத்து வேறுபாடு உள்ளது என தவறாக பரப்புகிறார்கள். மக்களுக்கு நல திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளதா என்பதை வரும் தேர்தல் பறைச்சாற்றும். மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். அ.தி.மு.க கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அ.தி.மு.க வின் பொதுச்செயலாளர் சசிகலா என கூறுவது அவர்களுடைய கருத்து. அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அ.தி.மு.க விற்கு தான் மக்கள் பலம் உள்ளது.
ஒ.பி.எஸ், பரதனாக இல்லாமல் ராவணனுடன் சேர்ந்து விட்டார் என டி.டி.வி தினகரன் கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க மீது எந்த வித விமர்சனம் வைத்தாலும் அதற்கு பதில் அளிக்க தலைமையிலிருந்து நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அதற்கு சிறப்பான பதில் அளிப்பார்கள் என்று தெரிவித்தார்..
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஜாக்குலின், சிந்தை முத்துக்குமார், மருத்துவர் சுப்பையா பாண்டியன், தமிழரசி, அத்தர் பெருமாள், மகாலட்சுமி மலையப்பன், கருமண்டபம் ஞானசேகர். ஏர்போர்ட் விஜி வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.