யாதவர்கள் எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
யாதவர்கள் எழுச்சி மாநாடு மார்ச் 7ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.இதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் திருச்சி பழைய பால் பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டி வளாகத்தில் நடைபெற்றது
.இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு யாதவர் பேரவை கூடுதல் பொதுச் செயலாளர் பி.ஸ்ரீதர், திருச்சி வெங்காய மண்டி பொதுச் செயலாளர் தங்கராஜ், தமிழ்நாடு யாதவர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு யாதவ சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சோலை பிச்சை, பாரத முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பாரதராஜா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சென்னையில் நடைபெறும் மாநாட்டில் திருச்சியில் இருந்து திரளான யாதவர்கள் வாகனங்களில் சென்று கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
பின் சோலைமலை பிச்சை கூறுகையில், தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் யாதவ சமுதாய மக்கள் 20 சதவீதத்திற்கு மேல் உள்ளனர்.தொடர்ந்து ஆளும் கட்சியாளும், எதிர்க்கட்சிகளும் யாதவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும்.இதற்காக பல்வேறு அமைப்புகளில் உள்ள யாதவ தலைவர்கள் ஒன்றிணைந்து யாதவ மக்களை ஒருங்கிணைத்து தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுச்சி மாநாடு சென்னையில் நடைபெறுகிறது
.இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான யாதவ மக்கள் கலந்து கொள்வார்கள் என்றார்.
இந்த கூட்டத்தில் வழக்கறிஞர் சரவணன், கோபால் உள்ளிட்ட யாதவ அமைப்புகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.