இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற உள்ளது .
முதல் இரண்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் ஐந்தாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இதற்காக இந்திய வீரர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் கோலி, ரகானே பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நேற்று முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,
இரண்டாவது டெஸ்ட் போட்டியினை கான குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.