Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணா நினைவுநாள்.: வடக்கு மா.செ. மு.பரஞ்ஜோதி அறிக்கை.

0

பேரறிஞர் அண்ணா அவர்களின் 52-வது ஆண்டு நினைவு நாள்
——————-
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச்செயலாளர்,
முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி
அறிக்கை
—————-
வருகின்ற 3.2.2021-ந்தேதி (புதன்கிழமை) பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 52-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமாள ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க,

பேரறிஞர் அண்ணாவின் 52-வது ஆண்டு நினைவு நாளையொட்டி,

வருகின்ற 3.2.2021-ந்தேதி (புதன்கிழமை) திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலுள்ள கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலை மற்றும் அவரது திருவுருவப்படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள். முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, ஊராட்சி, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவு, கலைப்பிரிவு, கூட்டுறவு சங்க, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள், தொண்டர்கள் அனைவரும் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.