கர்நாடக சிறையில் இருந்து நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்து 27 ம் விடுதலை ஆனார் சசிகலா .
கொரோனா தொற்று காரணமாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
உடல்நிலை முன்னேற்றம் அடைந்த காரணத்தினால் இன்று காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பின் அதிமுக கொடி கட்டிய காரில் ஓய்வு எடுப்பதற்காக பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டுக்கு கிளம்பினார்.
சசிகலாவின் காரில் அதிமுக கட்சி கொடி ஏற்றியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து டிடிவி தினகரன் கூறுகையில்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான் , அதனால்தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது
சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமையும் உள்ளது , அதில் எந்த சர்ச்சையும் இல்லை.
அதிமுகவை மீட்டெடுக்கதான் அமமுக தொடங்கப்பட்டது.
வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர்தான் , சட்டப் போராட்டம் தொடரும். பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தற்போது சசிகலா தங்கியுள்ளார்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒருவாரம் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்த பிறகு சசிகலா சென்னை திரும்புவார் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.