வரி ஏய்ப்பு புகாரால் நடவடிக்கை என்ற பெயரில் சிறுபான்மை கிறிஸ்தவ கல்லூரி ஜெபகூடங்களில் சோதனை நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்மான கல்லூரி, ஜெபகூடங்கள், பள்ளிகள் மற்றும் இயேசு அழைக்கிறார் அலவலகங்கள் உட்பட பல இடங்களில் வரி ஏய்ப்பு என்ற புகாரின் பெயரில் சிறுபான்மை கிறிஸ்துவ கல்வாரி, பள்ளி மற்றும் பிராத்தனை கூடங்களில் வருமான வரித்துரை அதிரடி சோதனையை நேற்று காலை 8 மணி முதல் தொடங்கியது.
கோவை சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்துவது என்பது மதம் சாந்த சிறுபான்மை மக்களை அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இதனை கிறிஸ்தவ திருச்சபைகள் ஐக்கிய பேரவை சார்பில் வண்மையாக கண்டிக்கிறோம்.
தமிமக முதலமைச்சர் மற்றும் உள்துறை செயலர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.
என திருச்சி கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை நிறுவன தலைவர் ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.