தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சுமார் 500 மீட்டர் தூரம் குதிரை வண்டி ஒட்டி அசத்தினார்.
அமைச்சர் அச்சு, அசலாக தொழில் தெரிந்த குதிரை வண்டிக்காரன் போல குதிரை வண்டி ஒட்டியது குதிரை வண்டிக்காரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கரூரில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் குதிரை வண்டியை ஓட்டுமாறு எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் தெரிவித்தனர்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு குதிரை வண்டியை தானாக ஒட்டிச் சென்றார். வருகிற 17-ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பாக குதிரை பந்தயம் நடைபெறுவதை ஒட்டி அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குதிரை வண்டிகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில்தான் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஷ் (எ) முத்துக்குமார் வேண்டுகோளை ஏற்று குதிரை வண்டியை தானாகவே அமைச்சர் ஓட்டினார். அவர் அச்சு, அசலாக தொழில் தெரிந்த குதிரை வண்டிக்காரன் போல குதிரை வண்டி ஒட்டியது குதிரை வண்டிகாரர்களை, அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.