திருச்சி அரியமங்கலத்தில்
வெல்டிங் பட்டறை அதிபரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு
2 ரவுடிகள் கைது .
திருச்சி அரியமங்கலம் விரகு கடை தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 42).
இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார் வடக்கு உக்கடை பகுதியிலுள்ள தனது வெல்டிங் பட்டறை முன்பு சாகுல்ஹமீது நின்று கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கத்தி முனையில் 5,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டினர் பணம் கொடுக்க மறுத்ததால் அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இதுகுறித்து பட்டறை அதிபர் சாகுல்ஹமீது கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த குலாம் தஸ்தகீர் வெங்கடேசன் ஆகிய இருவரை கைது செய்தனர் .
இதில் குலாம் தஸ்தகீர் மீது 8 வழக்குகளும், வெங்கடேசன் மீது 6 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.