1) *பெண்ணை மிரட்டியதாக மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.வாலிபர் கைது*
திருச்சி சங்கரன் பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 46) இவர் அந்த பகுதியில் தன்னுடைய வீட்டில் நீண்ட காலமாக குடியிருந்து உள்ளார். அவரது பக்கத்து வீட்டுக்காரர் பிராங்களின் (வயது 21) என்ற வாலிபர் அடிக்கடி இவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று பிராங்கிளின் பரமேஸ்வரி இடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து பரமேஸ்வரி கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசிய வாலிபரை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2.) *மன உளைச்சலில் இருந்த வாலிபர் தற்கொலை*
திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (வயது52) இவருடைய மகன் ஹருண் பாஷா (வயது 26) இவர் கடந்த ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதை தொடர்ந்து சமீபகாலமாக சிறிது நாட்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் அதிக மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென வீட்டில் இல்லாத சமயம் பார்த்து மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார்கள். மேலும் வாலிபர் காதல் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டு இருப்பாரோ? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து வாலிபர் மன உளைச்சலில் தான் தூக்கு போட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3) பங்குச் சந்தையில் நஷ்டம் மன உளைச்சலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.
திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் கனகசபை (வயது 39) இவர் பங்குச் சந்தையில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டு போகவே அதிக மன உளைச்சலில் அவருடைய வீட்டில் இருந்துள்ளார். அதை தொடர்ந்து வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த அவரது சகோதரி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
4. *லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த முதியவர் கைது*
திருச்சி பாலக்கரை ரயில்வே கேட் பகுதியில் அதிகமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதாக மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாலக்கரை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது விசாரணையில் திருச்சி பாலக்கரை கேம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 50) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரிடம் இருந்து ரூபாய் 5000 பணமும் சில லாட்டரி டிக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்து அந்த முதியவரை பாலக்கரை போலீஸார் கைது செய்தனர்.