திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி – கரூர் சாலை சந்திப்பிலுள்ள தாஜ் திருமண மண்டபம் வாசலில், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், திரளான கழக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.