Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆஸ்திரேலியாவுடனான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

0

இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது கிரிக்கெட் போட்டி இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் மெல்போர்னில் கலந்தர் 26ஆம் தேதி தொடங்கியது.

கேப்டன் விராட் கோலி தனக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளதால் மனைவி உடன் இருக்க வேண்டும் எனக் கூறி இந்தியா திரும்பினார்.

இந்த போட்டிக்கு துணை கேப்டன் ரஹானே கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழி நடத்தினார்.

ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு இந்திய பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சுருண்டது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி கேப்டன் ரகானேயின் சிறப்பாக சதத்தின் உதவியுடன் 326
ரன்கள் எடுத்து 121 ரன்கள் முன்னிலை வகித்தது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு சுருண்டது

அதைத்தொடர்ந்து 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது போல் ஆகி விடுமோ என்று எண்ணி இருந்த நிலையில் இளம் வீரர் கில் மற்றும் கேப்டன் ரகானே அற்புதமாக விளையாடி மேலும் விக்கெட் இழக்காமல் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற செய்தனர்.

விராட் கோலி இல்லாமல் விளையாடினாலும் இந்திய அணியால் ஆஸ்திரேலியா போன்ற அணிகளை வெல்ல முடியும் என நிரூபித்து உள்ளனர் இந்திய இளம் வீரர்கள்.

இந்த போட்டியில் கேப்டன் ரகானே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீதமுள்ள 2 டெஸ்ட்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்ல வாழ்த்துவோம்.

Leave A Reply

Your email address will not be published.