திருச்சி மாநகட்ட மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர் வெல்லமண்டி நடராஜன், சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின்
செய்தி அறிக்கை
நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் மாண்புமிகு தமிழக முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு தோதல் பிரச்சாரத்திற்கு 30.12.2020 புதன் கிழமை, 31.12.2020 வியாழக்கிழமை ஆகிய இரண்டு கிழமைகளில் திருச்சி மூன்று மாவட்டங்களில் சுற்றுபயணம் செய்ய இருக்கிறார்.
31.12.2020 அன்று மாலை 06.00 மணி அளவில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதவியின் 08.00 மணி அளவில் நத்தர்ஷா பள்ளிவாசல் சென்று இஸ்லாமிய உலமாக்கள், இமாம்கள், ஆலிம்கள் ஆகியோர்களை சந்திக்கிறார்.
அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு. பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி. இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு, Ex.கோட்டத் தலைவர்கள், Ex.உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.