கோவை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
கோவை வடக்கு மாவட்டம் சார்பாக வன்னியர் சமூக மக்களுக்கு 20 சதவிகித இட ஒதுகக்கீடு கோரி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டமும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்கும் நிகழ்வு மாநில துணை தலைவர் மின்னல் சிராஜ் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் சிறுமுகை, காரமடை,பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம்,கூடலூர் மற்றும் இதர பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மனு வழங்கல் நிகழ்வு நடைபெற்றது
நிகழ்வில் மாநில அமைப்பு துணை செயலாளர் ஆ.தங்கராஜ்,மாநில பொறுப்பாளர் அல்போன்ஷா பாலு, பாட்டாளி தொழிற்சங்க மாநில துணை செயலாளர் மேட்டுப்பாளையம் முகமது ரபி,மாவட்ட தொழிற்ச்சங்க தலைவர் ஜெயராம் ஜி, மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் காந்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அக்னி தேவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஏ ஜி ஆர் ராஜ்குமார், மேட்டுப்பாளையம் நகர தலைவர் அருண் குமார், நகர செயலாளர் ப்ளவர் சாஜகான் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்ட நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்