Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தபாலில் சபரிமலை பிரசாதம். பக்தர்கள் மகிழ்ச்சி

தபாலில் சபரிமலை பிரசாதம். பக்தர்கள் மகிழ்ச்சி

0

தபால் மூலம் சபரிமலை பிரசாதம்; பக்தர்களிடையே பெரும் வரவேற்பு.

சபரிமலை ஐயப்பன் கோயில் சுவாமி பிரசாதத்தை தபாலில் பெறுவதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது. சபரிமலை சுவாமி பிரசாதம், பக்தர்களின் வீடுகளுக்கேச் சென்றடையும் திட்டத்தைத் தபால் துறை கடந்த நவம்பர் மாதம் 6-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 9000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகின்றது. இந்தத் திட்டத்தின்படி இந்தியாவில் உள்ள எந்த அஞ்சல் நிலையத்தில் இருந்தும் ரூ. 450 செலுத்தி, பக்தர்கள் சுவாமி பிரசாரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அரவண பாயாசம், நெய், திருநீறு, குங்குமம், மஞ்சள் மற்றும் அர்ச்சனை பிரசாதம் ஆகியவை விண்ணப்பித்த பக்தர்களுக்கு தபால் மூலம் வழங்கப்படும். ஒருவர் அதிகபட்சமாக 10 பிரசாதங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.