நடிகர் விஜய் விரைவில் சேனல் தொடங்க உள்ளார். ரசிகர்கள் மகிழ்ச்சி.
நடிகர் விஜய் விரைவில் சேனல் தொடங்க உள்ளார். ரசிகர்கள் மகிழ்ச்சி.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் விரைவில் யூடியூப் சேனல் தொடங்க உள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அதன் மூலம் நேரடியாக தனது ரசிகர்களுக்கு சொல்ல வருவதை வீடியோவாக வெளியிடுவார் என்பதால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.
சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாத நடிகர் நடிகைகள் தான் யூடியூப் சேனல்கள் தொடங்கி வந்த நிலையில் சினிமா மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் விஜய் யூடியூப் சேனல் தொடங்க உள்ளார் என்பது சற்று ஆச்சர்யம்தான்.
அதே நேரத்தில் ரசிகர்களும் அந்த சேனலை பின்தொடர காத்து கொண்டு இருக்கிறார்கள்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் காரணமாக பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் தன்னைச் சார்ந்த விஷயங்களை நேரடியாக ரசிகர்கள் தெரிந்து கொள்ளும்படி இந்த யூடியூப் சேனல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விஜய் ரசிகர்கள் ஒவ்வொருவரும் பல நலத் திட்டங்களில் ஈடுபடுவதையும் அனைவருக்கும் தெரியும் வகையில் இதில் ஒளிபரப்ப உள்ளார்களாம்.
வருங்காலத்தில் அரசியலுக்கு வர இந்த யூடியூப் சேனல் மிக உதவியாக இருக்கும் என்பதால் விஜய்யின் மேலாளர் புஸ்ஸி ஆனந்த் ஐடியாவுக்கு விஜய் ஓகே கூறியுள்ளாராம்.
விரைவில் விஜய் தொடங்க உள்ள யூடியூப் சேனலின் அறிவிப்பை விஜய்யின் மேலாளர் புஸ்ஸி ஆனந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.