காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு , ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு , ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
கொரோனா பயம் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட்மார்ச் மாத இறுதியில் பூட்டப்பட்டது..
காய்கறி வியாபாரம் மட்டும் நகரில் பல பகுதியில் நடந்து வருகிறது..
காந்தி மார்க்கெட் உள்ளே செயல்பட்டுவந்த மளிகை கடைகள். அரிசி கடைகள். உள்ளிட்ட வேறு எந்த. கடைகளும் கடந்த 8 மாதமாக செயல் படவில்லை.
அதனை சார்ந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது …
இந்நிலையில் காந்தி மார்க்கெட்டை திறந்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் அதனால் காந்தி மார்க்கெட்டை திறக்கக்கூடாது என நீதி மன்றத்தில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது ..
அந்த வழக்கு விசாரணையானது வருகின்ற 26. 11. 2020 அன்று விசாரணைக்கு வர இருக்கிறது …
வழக்கு விசாரணையில் காந்தி மார்க்கெட்டை திறந்துவிட வேண்டும் என திருச்சி காந்தி மார்க்கெட் மொத்தம் மற்றும் சில்லறை வியாபார சங்கங்கள் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ..
மதுரை உயர்நீதிமன்றத்தில் காந்தி மார்க்கெட் திறப்பது பற்றிய பாதகமான தீர்ப்பு வந்தால்
வரும் 24ம் தேதி மாலை 6 மணி முதல்..
அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக
24-11-20 செவ்வாய் மாலை முதல் தொடர் காய்கனி வியாபார வேலை நிறுத்த போராட்டம்
# அனைத்து வியாபாரிகளும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் இருப்பது எனவும்முடிவு செய்யப்பட்டுள்ளது
#ஆதார் கார்டு.
ஐ.டி. கார்டு
ரேஷன் கார்டு ஆகியவை ஒப்படைக்கும் போராட்டமும் ..
#வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடாமல் புறக்கணிப்பு போராட்டம் செய்வது எனவும்..
இந்த முடிவால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்பு அடைவார்கள் ..
பொதுமக்கள் வியாபாரிகள் நலன் கருதி
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெறும் காந்தி மார்க்கெட் வழக்கு விசாரணையில்
தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து ..
காந்தி மார்க்கெட்டை திறந்து விட வேண்டி
கேட்டு கொள்கிறோம்.. உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் கோவிந்தராஜுலு , ? பொது செயலாளர் வெங்கடாசலம், செயலாளர் அப்துல் ஹக்கீம், பொருளாளர் சுல்தான் பாஷா ,காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கமலக்கண்ணன், SKD பாண்டியன், மற்றும் காய்கறி வியாபாரிகள் ,பூ வியாபாரிகள் என அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்