Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சென்னை, திருச்சி, கரூரில் உள்ள கோயில்களில் விரதத்தை முடிக்கும் தமிழக ஐயப்ப பக்தர்கள்.

சென்னை, திருச்சி, கரூரில் உள்ள கோயில்களில் விரதத்தை முடிக்கும் தமிழக ஐயப்ப பக்தர்கள்.

0

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
நடை திறப்பதையொட்டி பம்பை ஆற்றில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரத்தில் 5 நாட்களுக்கு நாள் ஓன்றுக்கு 1,000 பக்தர்களுக்கும், வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களுக்கு தலா 2,000 பக்தர்களுக்கும், மண்டல, மகர விளக்கு நாட்களில் 5,000 பக்தர்களும் அதுவும் ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தினமும் 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 2,000 பக்தர்களுக்கும், மண்டல, மகர விளக்கு நாட்களில் 5,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று இல்லை என்பதை 24 மணி நேரத்துக்கு முன்பாக உறுதி செய்யும் மருத்துவ சான்றிதழுடன் பக்தர்கள் வர வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது படி பூஜை வரை ஆன்லைன் புக்கிங் அனைத்தும் முடிந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் இருந்து ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியாத ஐயப்ப பக்தர்கள் அனைவரும் நாளை முதல் மாலை அணிவித்து மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர். கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்கு போக முடியாவிட்டாலும் தமிழகத்திலுள்ள சென்னை அண்ணாமலைபுரம், திருச்சி கன்டோன்மென்ட் இல் அமைந்துள்ள ஐயப்பன் கோயில், கரூர் லாலாப்பேட்டை கருப்பத்தூரில் உள்ள ஐயப்பன் கோயில் என இப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று கார்த்திகை மாத விரதத்தை முடிக்க பெரும்பாலான தமிழக ஐயப்ப பக்தர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.