இன்றைய ராசிப்பலன் – 09.11.2020 .
மேஷம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும்.
வீட்டில் அமைதி குறைவதற்கான சூழ்நிலை இருக்கும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் தாமத நிலை இருக்கும். பூர்வீக சொத்துக்களில் லாபம் உண்டாகும். தொழிலில் உற்சாகத்துடன் இருப்பீர்கள்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத செலவுகள் இருக்கும்.வீட்டில் தேவையில்லாத பிரச்சனை உண்டாகும்.உடல் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. தொழிலில் நண்பர்களால் முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய திட்டம் வெற்றியை கொடுக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு இருக்கும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உடல்நிலை சற்று மந்த நிலையில் இருக்கும். குழந்தைகளுக்காக சிறு தொகையை செலவிட கூடும். எடுக்கும் முயற்சிகளில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். நிதானத்துடன் இருங்கள் அதுவே நல்லது.
சிம்மம்
உங்கள் இராசிக்கு தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உத்தியோக ரீதியில் புதிய கருவி வாங்கும் எண்ணம் மேலோங்கும்.உத்தியோகத்தில் உடன் பணிபுரிவோர்களால் அனுகூலம் கிட்டும்.சுப செலவுகள் ஏற்படும் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு மனக் குழப்பம் இருக்கும். உடன்பிறந்தவர்களால் வீண் விரயங்கள் உண்டாகும். தொழிலில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் அனுகூலம் கிடைக்கும்.தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் செய்தி உருவாகும். முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் நீங்கும்.
விருச்சிகம்
உங்கள் இராசிக்கு கடினமான காரியத்தையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்த கடன் பிரச்சனை நீங்கும்.தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகை உண்டாகும். வருமானம் கூடும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். வீட்டில் உள்ளவர்களிடம் அனுபவம் இருக்கும். உற்றார் உறவினர்களின் உதவி கிடைக்கும்.உத்யோகத்தில் குடல்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
மகரம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி நீங்கும்.தொழிலில் பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள் அதுவே நல்லது. வீட்டில் வீண் வாக்குவாதம் உண்டாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். குழந்தைகள் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் இருந்தால் பிரச்சனை விலகிப் நிம்மதி கூடும்.
மீனம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் மூலம் சுப செய்தி வந்து கூடும். உற்றார் உறவினர் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் திருப்தி கரமாக இருக்கும் லாபம். கடன்கள் அனைத்தும் வசூலாகும். சேமிப்பு பணம் உயரும்.