பேச்சிலர்ஸுக்கு உடனடி விருந்தாக மாறும் சுவையான முட்டை மசாலா குழம்பு.
நொடியில் சுவையான அசைவ உணவு சாப்பிட வேண்டும் எனில் அனைவருக்கும் நினைவில் வருவது முட்டைதான். முட்டை புரதச்சத்து நிறைந்தது என்பதால் ஆரோக்கியமான உணவும் கூட.. எனவே பேச்சிலர்கள் சமைக்க என்ன செய்வது என யோசித்தால் இந்த முட்டை மசாலா குழம்பை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
முட்டை – 5
எண்ணெய் – 100 ml
மிளகாய் தூள் – 1/2 tbsp
மஞ்சள் பொடி – 1/4 tbspபிரிஞ்சு இலை – 2
முட்டை கறி மசாலா – 2 tbsp
தனியா பொடி – 1 tbsp
உப்பு – 1/2 tbsp
வெங்காயம் – 3
தக்காளி – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 tbsp
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
செய்முறை :
முதலில் முட்டையை வேக வைத்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் விட்டு பிரிஞ்சு இலை வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய் , கருவேப்பிலை சேர்த்து வதக்குங்கள்.
அடுத்ததாக தக்காளி சேர்த்து வதங்கி குழைந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தனியா தூள் , முட்டை கறி மசாலா , உப்பு என சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளுங்கள்.
வதங்கியதும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து தீயை அதிகமாக வைத்து கொதிக்க வையுங்கள். தட்டுபோட்டு மூடிவிடுங்கள்.
10 நிமிடங்கள் கொதித்ததும் தண்ணீர் சுண்டி கெட்டிப்பதத்தில் இருக்கும். பின் வேக வைத்த முட்டையில் நான்கு பக்கமும் கத்தியால் கீறிவிட்டு குழம்பில் போடுங்கள். பின் குழம்பை முட்டை மேல் ஊற்றியவாறு ஊற வைத்து மூடிவிடுங்கள்.
அவ்வளவுதான் முட்டை மசாலா குழம்பு தயார். சாப்பிடும்போது முட்டை குழம்பின் சாறு இறங்கி ருசியாக இருக்கும்