திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் தர்ணா
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் தர்ணா
திருச்சி மணிகண்டத்தை அடுத்த தீனதயாளன் நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 30 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் வசிக்கும் தங்களது பகுதிக்கு பட்டா வழங்கப்படவில்லை.
மேலும் இது குறித்து பல்வேறு அரசு அலுவலகங்களில் மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லை என குற்றம்சாட்டி இந்த தர்ணா போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இருவர் மட்டும் மாவட்ட கலெக்டரை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து தர்ணா விலக்கிக்கொள்ளப்பட்டது.