Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி, உணவு பொருட்கள் விலை உயருமா ?

சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி, உணவு பொருட்கள் விலை உயருமா ?

0

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை திடீர் உயர்வு… உணவுப்பொருட்கள் விலை உயருமா?

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், மாதந்தோறும் 1ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இந்த நிலையில், நவம்பர் மாதத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக மானிய விலை சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதன்காரணமாக சென்னையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நவம்பர் மாதத்துக்கும் ரூ.610 ஆக நீடிக்கிறது. அதேநேரத்தில் டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களில் ரூ.594 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.620.50 ஆகவும் சமையல் எரிவாயு விலை நீடிக்கிறது.

ஆனால், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை ரூ.78 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் அதன் விலை ரூ.1,354 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் டெல்லியிலும் வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து டெல்லியில் ரூ.1,241.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,296 ஆகவும், மும்பையில் ரூ.1,189.50 ஆகவும் அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.