ரஜினி சொன்னது போல் விஜயதசமி அன்று கட்சியை ஆரம்பிப்பாரா ?
ரஜினி சொன்னது போல் விஜயதசமி அன்று கட்சியை ஆரம்பிப்பாரா ?
*இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு.. ஆனா எந்த அறிகுறியையும் காணோமே.. அப்படீன்னா.. டிசம்பர்தானா??*
சென்னை: நாளைக்கு ஒருநாள்தான் இருக்கிறது.. விஜயதசமி அன்று தெரிந்துவிடும், ரஜினி கட்சியை ஆரம்பிக்குவாரா? இல்லையா என்று…!
அரசியல் வருகை குறித்த கால் நூற்றாண்டு எதிர்பார்ப்புடன், சலித்து போய் ஓய்ந்து போன ரஜினி ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கை மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.. அதற்கு காரணம், விஜயதசமி அன்று ரஜினி குறித்த அரசியல் அறிவிப்பு ஏதாவது வெளியாகும் என்பதால்தான்!
பல கட்சிகள் தேர்தலுக்கான வேலைகள், கூட்டணிகள், சீட் பேரங்களில் இறங்கிவிட்ட நிலையில், நவம்பரிலாவது ரஜினி கட்சி ஆரம்பித்ததும் வேலைகளை ஜரூராக செய்யலாம் என்று மன்ற நிர்வாகிகள் காத்திருந்தனர்.. ஆனால், பிப்ரவரியில் ரஜினி கட்சி ஆரம்பிப்பாக ஒரு செய்தி வந்தது.. அப்படியானால், கட்சியை பிப்ரவரி ஆரம்பித்து, எப்படி வரப்போகிற தேர்தலில் போட்டியிட முடியும்? எப்படி கள வேலைகள் நடந்து முடியும்? என்ற கலக்கம் ரசிகர்களிடையே நிலவியது.
இந்த சமயத்தில்தான், விஜய தசமி தினத்தன்று புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் ஒரு செய்தி வெளியானது.. அன்றைய தினம், வீடியோ பதிவு மூலம் ரஜினி வாய்ஸ் கொடுத்து இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்பட்டது.
அதற்கேற்றார்போல், அரசியல் ரீதியாக ரஜினி வாய்சில் 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தனது அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பையும் இந்த வீடியோ மூலமே ரஜினி வாய்சில் தயார் நிலையில் இருப்பதாகவும் 2 தினங்களுக்கு முமன்பு தகவல் வந்தன.
அதுமட்டுமில்லை, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ரசிகர்களின் பாதுகாப்பு, தன் உடல் நலம் ஆகியவற்றை கருதி, கொரோனா தடுப்பூசி வந்த பின், ரஜினியின் நேரடி பிரசாரம் துவங்கும் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.. இலவச தடுப்பூசி தமிழகத்துக்கு அனைவருக்கும் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததையொட்டி, இப்படி ஒரு ஆலோசனை மன்ற நிர்வாகிகளிடம் நடந்துள்ளதாக தெரிகிறது…
அதனால்தான் அடிமட்ட கிராம அளவில், பொது சுகாதாரம் கட்டமைப்பை மேம்படுத்தும் வாக்குறுதிகள் தொடர்பாக, ரஜினி பேசியுள்ள, 50 வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு உள்ளனவாம். மேலும், ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சிக்கும் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கைக்கு ஆள் சேர்க்கும் படலமும் தொடங்கி விட்டதாம்.
இதையெல்லாம் பார்த்து பூரித்து போய்ரசிகர்கள் உள்ள நிலையில், “எதுக்கு இப்போ கட்சி ஆரம்பிக்கீறீர்கள்? அரசியல் சூழல்களால் உங்க இயல்பான, மற்றும் அன்பான மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படுமே” என்று ரஜினியின் நீண்ட கால நண்பர் அமலநாதன் உட்பட பலரும் அவருரக்கு அட்வைஸ் தந்து வருகிறார்களாம்.. ரஜினியின் அரசியல் வருகையை தடுக்கும் பின்னணியில் திமுகதான் செயல்பட்டு வருவதாக கிசுகிசுக்கப்பட்டாலும், இதற்கு ரஜினி எந்த ஒரு முடிவையும் சொல்லவில்லையாம்.
ஆக மொத்தம் ரஜினி, கட்சி துவங்க போகிறாரா? இல்லையா என்று தெரியவில்லை… ஆனால் நாளை மறுநாள் எப்படியும் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்ற நம்பிக்கை உள்ள நிலையில்கூட, அதற்கு எதிரான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..
ஒருவேளை ரஜினியின் கட்சி அறிவிப்பு வீடியோ, 26ம் தேதி விஜயதசமி அன்று வெளியாகவில்லை என்றால், அவரது பிறந்த நாளான, டிசம்பர் 12ம் தேதிக்கு அந்த வீடியோ நிச்சயம் வெளியாகும் என்று மக்கள் மன்ற வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.. இவ்வளவு வருஷம் பொறுத்தாகிவிட்டது.. இன்னும் ஒருநாள்தானே.. பொறுத்திருந்து பார்ப்போம்!