திருச்சி தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்
திருச்சி தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்
*திருச்சியில் தீயணைப்புத் துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!*
திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறை சார்பில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல், மாஸ்க் அணியாமல், கைகளை சுத்தம் செய்யாமலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதுடன், அதிக மன உளைச்சலில் இருந்து வருகின்றனர்.
இதனை போக்கும் வகையில் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி சார்பில் மினி மராத்தான் ஓட்டம் இன்று காலை திருச்சி மாநகரில் நடைபெற்றது. திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு துறை அலுவலகத்தில் இருந்து மூத்த தீயணைப்புத் வீரர் சகாயராஜ் மராத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் ஓட்டம் பீமநகர், பாரதி தாசன் சாலை, தலைமை தபால் நிலையம் வழியாக டிவிஎஸ் டோல்கேட் வரை இந்த மினி மராத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
இதில் தீயணைப்பு துறை சார்ந்த வீரர்கள், தன்னார்வ இளைஞர்கள், மினி மராத்தானில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டத்தின் போது வீரர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
மாரத்தான் முடிவில் தீயணைப்பு துறை சார்பில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.