திருச்சி காந்திமார்கெட் கடைகளுக்கு பவர் கட் வியாபாரிகள் அதிர்ச்சி .. “
திருச்சி காந்திமார்கெட் கடைகளுக்கு பவர் கட் வியாபாரிகள் அதிர்ச்சி .. "
திருச்சி காந்திமார்கெட் கடைகளுக்கு பவர் கட் வியாபாரிகள் அதிர்ச்சி .. ” திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள 490 கடைகளுக்கான மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். இந்த விவகாரம் வியபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதகாலமாக மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிப்பது வழக்கமான ஒன்று தான் என்றும், ஒவ்வொரு கடைகளுக்கும் டெபாசிட் உள்ளது எனவே மின் துண்டிப்பது தற்காலிகமானது தான் என மின்வாரியத்தினர் கூறுகின்றனர்.
இதுபற்றி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஹக்கீம் கூறியதாவது; கடந்த சில நாட்களில் காந்தி மார்க்கெட் டில் உள்ள 490 கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட் டுள்ளது. கடைகள் பூட்டப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது. பயன்பாடு இல்லாதநிலையிலும் குறைந்த பட்ச மின் கட்டணமாவது செலுத்த தயாராக நாங்கள் தயாராக இருக்கும் நிலையில் ஏன் மின்வாரியத்தினர் இந்த நடவடிக்கை எடுத்தார்கள் என தெரியவில்லை. எங்களுக்கு எந்தவித நோட்டீசும் வழங்காமல் மின்சாரத்தை துண்டிப்பது கண்டிக்கதக்கது. எங்களை அங்கிருந்து காலி செய்ய நிர்ப்பந்திக்கும் செயலாகவே இதனை நாங்கள் கருதுகிறோம் என்றார்.