தீ விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் சீனிவாசன் நிவாரண உதவி.
தீ விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் சீனிவாசன் நிவாரண உதவி.
திருச்சி மாநகர் சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியில் நேற்று அதிகாலை சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து நேரிட்ட திடீர் தீ விபத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது அங்குள்ள 18 குடிசைகள் எரிந்து தீக்கிரையாயின, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாயின.

இதைனை தொடர்ந்து திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் கழக நிர்வாகிகளுடன் தீ விபத்து நடந்த பகுதியினை நேரில் சென்று பார்வையிட்டதுடன்,
தீ விபத்தால் குடிசை மற்றும் பொருட்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நிவாரணத் உதவித்தொகை மற்றும் அரிசி, சமையல் பொருட்கள் மற்றும் வேட்டி சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அணி செயலாளர்கள் சொக்கலிங்கம்,பாலாஜி, பிரேம்குமார்,
பகுதி செயலாளர்கள்,
ரமேஷ், சங்கர்,வட்டச் செயலாளர் மோகன்தாஸ்,தன்ராஜ், மகேஷ்வரன் மற்றும் சித்தர் ரவி, அருண் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்