போலி ஆவணம் மூலம் பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு. மதுரையில் இருவர் மீது வழக்கு.
போலி ஆவணம் மூலம் பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு. மதுரையில் இருவர் மீது வழக்கு.
போலி ஆவணங்கள் மூலம் நிலஅபகரிப்பு
மானாமதுரையில் இருவர் மீது வழக்கு பதிவு.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற இருவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரதிநகரைச சேர்ந்தவர் சாத்தப்பன் மகன் பாஸ்கரன். இவருக்கு மானாமதுரை தெற்கு சாந்தனுாரில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 15 ஏக்கர் இடம் உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அந்த இடத்தை வேறு ஒருவர் வாங்கி உள்ளதாக கேள்விப்பட்ட பாஸ்கரன், அதிர்ச்சி அடைந்து விசாரித்தார். அப்போது ராமநாதபும், பார்த்திபனுார் இடையர் குடியிருப்பைச் சேர்ந்த கண்ணன், சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சிவராமன் ஆகிய இருவரும், ஆள்மாறாட்டம் செய்து, பாஸ்கரன் இடத்தை தங்களின் பெயருக்கு மாற்றியது தெரியவந்தது. மேலும், இதேபோல் ஆள்மாறாட்டம் செய்து, அதே பகுதியில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 50 ஏக்கர் நிலத்தையும் தங்களின் பெயருக்கு மாற்றி, வேறு நபர்களுக்கு விற்று வருவது தெரிய வந்தது.
இதுகுறித்து பாஸ்கரன் ஆவணங்களை திரட்டியபோது, நிலத்தின் உரிமையாளரான லட்சுமி என்பவர், 2006ம் ஆண்டு வரை இருந்த நிலையில், 1948ல் இறந்த லட்சுமி என்பவரை காண்பித்து, நிலங்களுக்கு பத்திரம் போட்டு, பட்டா மாற்றியது தெரிந்தது. உரிய ஆவணங்களுடன், மானாமதுரை போலீசில் பாஸ்கரன் புகார் அளித்தார். பின், சிவகங்கை எஸ்.பி., ரோகித் ராஜாகோபாலிடம் நிலமோசடி நபர்கள் குறித்து புகார் அளித்தார். எஸ்.பி.,யின் உத்தரவின் பேரில், மானாமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், கண்ணனும், சிவராமனும் போலி ஆவணங்கள் தயாரித்து, நிலங்களை அவர்களின் பெயருக்கு மாற்றியது, மாற்ற முயன்றதும், நிலங்களை வறறிருப்பதும் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து கண்ணன், 45, சிவராமன், 70, ஆகிய இருவர் மீதும், 466, 471, 420 ஆகிய மூன்று பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்கைள கைது செய்ய தேடி வருகின்னர்.
உஷாராக இருங்கள் மக்களே: சிவகங்கை மாவட்டத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்போர், அதை கண்டுகொள்ளாமல் இருப்பதை நோட்டம் விடும் மோசடி கும்பல், அந்த நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்று வருவது அதிகம் நடந்து வருகிறது. ஆகையால், சிவகங்கை மாவட்டத்தில் நிலம் வைத்திருப்போர், தங்களின் நிலம் தஙகளின் பெயரில் தான் உள்ளதா என்பதை அடிக்கடி பார்த்துக் கொள்ள வேண்டும் வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.