
இந்திய அணியின் அனைத்து வடிவிலான கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். இந்திய கேப்டனாக ஒரு ஆண்டில் அதிக டி20 வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை ரோகித் சர்மா சொந்தமாக்கியுள்ளார். ரோகித் சர்மா தலைமையின் கீழ் இந்தியா இந்த ஆண்டு இதுவரை 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி 16 போட்டிகளில் வென்றுள்ளது.
இதற்கு முன், 2016ல் இந்திய கேப்டனாக எம்.எஸ் தோனி 15 டி20 வெற்றிகளை பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது.
தற்போது அந்த சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

