Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 58வது முறையாக ரத்த தானம் செய்த 60 வயது முதியவர்.பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பாராட்டு.

0

'- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார் .

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நல பணி திட்டம் மற்றும் நெடுஞ்செழியன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இன்று ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லட்சுமி பிரபா, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவருமான இன்ஜினியர் ராஜசேகர், யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட அமைப்பாளரும் மற்றும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் பேராசிரியருமான முனைவர். குணசேகரன், திருச்சி மாவட்ட ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வளர்மதி, திருச்சி ரத்த வங்கி ஆட்டுநர் பாலச்சந்தர், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன்,
நெடுஞ்செழியன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் குமரவேல், ஸ்ரீரங்கம் ரோட்டரி கிளப் தலைவர் சத்யநாராயணன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர் நல சங்க தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாபெரும் இரத்ததான முகாமில் பொதுமக்கள் பல்வேறு கல்லூரியின் நாட்டு நலப்படுத்தப் பணித்திட்ட மாணவர்கள், யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் உறுப்பினர்கள் இரத்ததானம் செய்தனர்.

இந்த நிகழ்வின் தொடக்கமாக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு பின் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இந்த ரத்ததான முகாமில் இரத்த தானம் செய்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழையும் நினைவு பரிசாக மரக்கன்றுகளையும் மாண்புமிகு துணைவேந்தர் வழங்கினார்.

இந்த ரத்ததான முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் வாழ்நாள் உறுப்பினரும் மற்றும் சமூக சேவகருமான 60 வயது மூத்த குடிமகன் சீனிவாச பிரசாத் ரத்த தானம் செய்தார். இந்த ரத்த தானத்தையும் சேர்த்து சீனிவாச பிரசாத் அவர்கள் 58 முறை தனது வாழ்நாளில் ரத்த தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அவர்கள் சீனிவாச பிரசாத் அவர்களின் சேவையை மனதார பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்த நிகழ்வை நெடுஞ்செழியன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் குமரவேல் அவர்கள் ஏற்பாடு செய்து சிறப்பு ஒருங்கிணைத்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.