திருச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்பு பேட்ச் அனிந்து போராட்டம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அலுவலர்களை முதுநிலை மண்டல மேலாளர்களாக நியமித்ததை கண்டித்தும், அதை ரத்து செய்யக் கோரியும், நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும். காலதாமதமான நெல் இயக்கத்தினால் ஏற்படும் எடை குறைவிற்கு கொள்முதல் பணியாளர்களை பலிகடா ஆக்குவதை கண்டித்து|ம் சுமை தூக்குவோர்களை அவுட் சோர்சிங் முறையில் நியமிப்பதை கண்டித்தும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இன்று திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாநில செயலாளர் ராசப்பன், ஐ.என்.டி. யு.சி மண்டல செயலாளர் சதீஷ், தொ.மு.ச மண்டல செயலாளர் ரவீந்திரன், அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் ராஜேஷ், அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க துணை தலைவர் பாபு சாகிப் , இடது தொழிற்சங்க மையத்தின் மண்டல செயலாளர் தீன தயாளன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.