Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நண்பரை பீர் பாட்டிலால் தாக்கிய மூன்று பேர் கைது.

0

'- Advertisement -

 

 

திருச்சி எடமலைப்பட்டி புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 33).

இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது இவரது பழைய நண்பர்களான செபாஸ்டியன்(55), அலெக்ஸ் (35) கஞ்சா கணேசன் ஆகிய மூன்று பேரையும் சந்தித்துள்ளார்.

அதன்பின் நான்கு பேரும் இணைந்து மது அருந்துவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மது அருந்தி விட்டு பேசிக் கொண்டிருந்தபோது பழைய முன்விரோதம் குறித்து சரவணன் மற்றும் செபாஸ்டின் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது.

இதில் தகாத வார்த்தைகளால் பேசியதோடு சரவணனை அலெக்ஸ் பீர் பாட்டிலால் அடித்துள்ளார். மேலும் செபாஸ்டின் மற்றும் கஞ்சா கணேஷ் ஆகிய இருவரும் சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது குறித்து சரவணன் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செபாஸ்டின் மற்றும் அலெக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.