திருச்சி 47 வது வார்டில் நடந்து போக முடியாத நிலையில் சாலைகள். போராடும் 47 வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன்

திருச்சி கிழக்குத் தொகுதி 47 வது வார்டுக்கு உட்பட்ட கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர், இந்திரா நகர்,முத்து நகர், நியூ கோல்டன் நகர் பகுதிகளில் நடக்கும் பாதாள சாக்கடை பணிகளில் ஏற்பட்ட தொய்வினால், இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நடக்கக்கூட முடியாத நிலையில் சாலைகள் உள்ளதால் 47 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கடந்த 12ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி கேட்டிருந்தார், அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்

நேற்று முன்தினம் இரவு அப்பகுதி பொதுமக்களிடம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து நேற்று திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர், 47வது வார்டுக்கு உட்பட்ட பகுதி பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது,
பேச்சு வார்த்தையின் முடிவில் அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் பணிகளை முடித்து தருவதாக உறுதி கூறி உள்ளனர்..
தனது எம் எல் ஏ அலுவலகம் அருகில் உள்ள சாலையை மட்டும் சீரமைக்க வேண்டும் என இரவில் போராடி சாலை போட வைத்த இந்த கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பொதுமக்கள் நடந்து கூட போக முடியாத நிலையில் உள்ள சாலை குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை தான் வேதனையில் உச்சம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

