திருச்சியில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் புதுப்பித்த கட்டிடங்களுக்கு சீல்.
திருச்சியில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் புதுப்பித்த கட்டிடங்களுக்கு சீல்.
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் அருகே நந்தி கோயில் தெருவில் உள்ள தனியார் கட்டிடம் ஒன்று மாநகராட்சி அனுமதி பெறாமல் பழைய கட்டிடத்தை இடிக்காமல் மாநகராட்சி அனுமதியின்றி புதுப்பித்துள்ளனர். இந்த கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் கடந்த மாதம் 18-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (10-12-2020) சம்மந்தப்பட்ட கட்டிடத்தில் உள்ள ஒரு செருப்புகடை, ஜவுளிக்கடை, கோல்டு கவரிங்கடை ஆகிய 3 கடைகள் மற்றும் ஒரு வங்கி செயல்பட்டு வந்தது. இதில் கட்டிடத்தை 3 கடைகளுக்கு மற்றும் இன்று பூட்டி சீல் வைத்தனர். வங்கிக்கு மட்டும் நாளை வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.