
திருச்சி வழக்கறிஞர்களுக்கு விருது. பத்மஸ்ரீ சுப்புராமன் பாராட்டு.
இலக்கிய தாகம் ஐம்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களை இலக்கியதாகம் நிறுவனர் கவி. பெரியசாமி வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு திருச்சி
விஜிபி ஹவுசிங் யூனிட் துணைத்தலைவர் தங்கையா தலைமை தாங்கினார்.
ஆடுதுறை மனு நீதி சோழன் சட்ட மைய நிறுவனர் வழக்கறிஞர் மனோகரன் முன்னிலையில்
சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ சுப்புராமன் பங்கேற்று திருச்சிராப்பள்ளி
குற்றவியல் சங்க வழக்கறிஞர் பி.வி.வெங்கட் அவர்களுக்கு தங்கத் தமிழன் விருதும்,
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இறுதி சடங்கில் பெண் உரிமையை நிலைநாட்டும் வகையிலும், பாலின சமத்துவத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அனாதை பிரேதங்களை தம்பதி சகிதமாக சொந்த நிதியில் நல்லடக்கம் செய்து வருங்கால சந்ததியினர்க்கு முன்னுதாரணமாக திகழும் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியர்க்கு சேவை செம்மல் விருதும் வழங்கி பாராட்டினார்.

