
திருச்சியில் பாரம்பரியம் காப்போம் நிகழ்வு.
பாரம்பரிய உணவுகள், பழங்கால சிறார் விளையாட்டுகள், பாரம்பரியக் கலைகள், பழங்கால பொருள்கள் ஆகி யவற்றின் பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் திருச்சியில் பாரம்பரியம் காப்போம் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி மரங்கள் அறக்கட்டளை, மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு, பசுமை சிகரம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.
இந்நிகழ்வுகளில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய சமையல், காய்கனிகள், கீரை, மரம் மற்றும் நெல் ஆகியவற்றின் பாரம்பரிய விதைகள், சிலம்பம், கில்லி, நுங்கு வண்டி, பாண்டி, தாயம், பல்லாங்குழி, பச்சைக் குதிரை, கும்மியாட்டம், ஒயிலாட்டம், கரகம், பொய்க்கால் குதிரை, தப்பு,பறை, கொம்பு,ஆர்மோனியம்,வீணா,களரி,சுருள்வாள்,பூமராங், கத்திச்சண்டை, ஈட்டி, வேல்கம்பு, மண்பானை, செம்பு, பித்தளை, வெண்கலம், பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், வானொலி பெட்டிகள், பதநீர், இளநீர், பானகம், மோர்
உள்ளிட்டவற்றைக் காட்சிப் படுத்தி, விற்பனையும் செய்யப்பட்டது, மேலும் தமிழர் கலைகளை கற்றும் தரப்பட்டது.
கிருஷ்ண மூர்த்தி நகரிலுள்ள ஜெகன் மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது
.
இதேபோல, ஜூலை 10ஆம் தேதி திருவானைக்காவல் தெப்பக்குளம் அரு கேயுள்ள கணேஷ் டிராவல்ஸ் வளாகத்திலும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடு களை ஒருங்கிணைப்பாளர்களான மரம் பி. தாமஸ், மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், விதைகள் எஸ். யோகநாதன், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி. ச தீஷ்குமார், தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே. ராஜா ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
நிகழ்வுவிற்கு நகைச்சுவை மன்றம் செயலாளர் சிவகுருநாதன் , எம்.ஆர் பாளையம் தமிழ்நாடு மரவிதைகள் ஒருங்கிணையாளர் ராம் சுந்தர், ஹலோ எப்.எம். சகா, பாரதிதாசன் பல்கலைக்கழகம் இயக்குனர் பேராசிரியர் மணிமேகலை, பத்மஸ்ரீ தாமோதரன், எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி இயக்குனர் ஹோமலதா, கவிஞர் தலைெட்சுமி பாஸ்கரன், கவிதா சுரேஷ், ரகு , சாத்தனூர் சிவா மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள் .

