
திருச்சி மாவட்ட நூலகத்தில்
டிஎன்பிஎஸ்சி மாதிரித் தேர்வு.
திருச்சி மாவட்ட நூலகத்தில் டி என் பி எஸ் சி தொகுதி 4 க்கான மாதிரி தேர்வு திங்கள் கிழமை நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாதெமி
இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி என் பி எஸ் சி குரூப் 4) தொகுதி 4 போட்டித் தேர்விற்கான
மாதிரி தேர்வு ஜூன் மாதம் 27ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட மைய
நூலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு
வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர்}விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும். போட்டித்தேர்விற்கு தயார் செய்யும் மாணவ,மாணவியர் தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அழைக்கப்படுகிறார்கள். இத்தகவலை மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் க.தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

