திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சூர்யா தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவர் திருச்சி முன்னாள் தி மு க பாராளமன்ற உறுப்பினர் மகன் என்பதால் சிறிது நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில்
இவரது திறமையும் உழைப்பையும் நம்பி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இவருக்கு மாநில ஓபிசி அணி பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை என்மீது வைத்துள்ள நம்பிக்கையில் மாநில செயலாளர் பதவியை வழங்கியுள்ளார்.
இதனை மகிழ்ச்சியாக ஏற்று நான் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன்.
பதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் கட்சியில் இணையவில்லை.
இனி தமிழகத்தை ஆளும் கட்சி பாரதிய ஜனதா தான் என தெரிந்து தான் இணைந்தேன் என பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி பிரிவு மாநில பொது செயலாளர் சூர்யா கூறியுள்ளார்.
சூர்யாவை ஊக்கப் படுத்தும் விதமாக இப்பொழுது வழங்கப்பட்டதாக கூறினாலும் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிகம். கிடைக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட பாஜக அந்த வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டு அதன் ஒரு செயல்பாடாக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சூர்யாவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பட்டியலினத்தவர் தவிர மற்ற அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைக்கும் பொதுவான பதவி இது என்றாலும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கிய பணி முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக திரட்டுவது தான் என கூறப்படுகிறது.