பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும். திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
வகுப்பறைகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் பேட்டி.
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் வீட்டுமனைப்பட்டா இலவச வீட்டுமனைப் பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கு, ஸ்கூட்டி, தையல் இயந்திரம்,சலவைப் பெட்டி உள்ளிட்ட
ரு.62 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் மதிவாணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம்
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். பொதுமக்களின் கோரிக்கைகளை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
மாணவர்களுக்கு வகுப்பறையில் செல்போன்கள் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அப்படி மீறி எடுத்து வந்தால் கண்டிப்பாக அதனை பறிமுதல் செய்வோம், மீண்டும் திருப்பி கொடுக்கப்பட மாட்டாது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் அதிகமாக செல்போன்களை பயன்படுத்தும் காரணத்தினால் நிறைய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது ஆனால் தற்போது அதனை சரி செய்வதற்கு வகுப்பறைகளில் பாடம் எடுப்பதற்கு முன்பாக அவர்களுக்கு புத்தாக்க பயிற்சி கொடுக்கப்பட்டு பின்னர் தான் வகுப்புகள் துவக்கப்படுகிறது.
குறிப்பாக 11,12-ம் வகுப்புகளுக்கு முதல் 5 நாட்களுக்கு என்.ஜி.ஓ, காவல்துறை அதிகாரிகள் போன்றவர்கள் சிறப்பு வகுப்புகள்எடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் ரமேஷ் குமார், டி.ஆர்.ஓ. பழனி குமார்,தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய (குடிசை மாற்று வாரியம்) செயற்பொறியாளர் இளம்பரிதி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.