விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து திருச்சியில் எஸ். ஆர்.எம்.யூ மாநிலத் துணைச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து
திருச்சி பொன்மலையில் இன்று எஸ்.ஆர்.எம்.யூ கண்டன ஆர்ப்பாட்டம்.
மாநில துணைச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
சுற்றுலா என்ற பெயரில் கோவை -சீரடி விரைவு ரயிலை தனியாருக்கு விற்பதை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
ராமாயண யாத்ரா என்ற பெயரில் டெல்லி -நேபாள் ரயிலை விற்றதை வாபஸ் வாங்க வேண்டும் .பாரத் கெளரவ் என்ற பெயரில் சுற்றுலா ரயில்கள் என நூறு விரைவு ரயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே முழுவதும் அனைத்து கிளைகளிலும் இன்று கருப்புக்கொடி ஏந்தி எஸ்.ஆர்.எம்.யூ.
சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் திருச்சி பொன்மலையில் இன்று மதியம் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில துணைச் செயலாளரும், கோட்ட செயலாளருமான வீரசேகரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.