திருச்சி அன்னை டிரஸ்ட்,பொன் கிரிஸ்டல் நிதி நிறுவனம் சார்பில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் அன்னை டிரஸ்ட், பொன் கிரிஸ்டல் நிதி நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கருத்தரங்கு.
சுற்றுச்சூழல் அறிவியல் துறை, பிஷப் ஹீபர் கல்லுாரி மற்றும் (EWASH) – தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் நீர் மற்றும் சுகாதாரத்திற்கான கூட்டமைப்பு இணைந்து
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் அன்னை டிரஸ்ட், பொன் கிரிஸ்டல் நிதி நிறுவனம்,கல்லூரியில் சுற்றுச்சூழல் அறிவியல் துறை மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரியில் நீர் மற்றும் சுகாதாரத்திற்கான கூட்டமைப்பு இணைந்து 22 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தையொட்டி “தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் குடிநீர் பாதுகாப்பு மற்றும் அதன் பின்னடைவில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த மாநில அளவிலான கருத்துப்பட்டறை” நடைப்பெற்றது.
இவ்விழாவில் பத்மஸ்ரீ சுப்புராமன், பத்மஸ்ரீ தாமோதரன் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் கோவிந்தராஜ் ஆகியோரை கௌவுரவப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்வளத் துறை பாதுகாப்பு மற்றும் இயற்கை சூழ்நிலை மீட்டெடுப்பது குறித்து துறை வல்லுனர்கள் ஆலோசித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அன்னை டிரஸ்ட் நிறுவுனர் அ.ஞானசேகரன்,
பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் முனைவர்.
பால்தயாபரன், அன்னை டிரஸ்ட் இயக்குனரும் பொன் நிதிநிறுவன சிஇஓ வும்மான மேகலா, முனைவர் நடனசபாபதி ராஜகோபால், முஹம்மது ஹுசைன், பக்தவச்சலம், பிஷப் ஹீபர் கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் துறை முனைவர். ரவிச்சந்திரன் மற்றும் முனைவர். டெய்சி கரோலின் மேரி ஆகியோர் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.